சங்க இலக்கிய அகப்பாடல் மரபுகளுள் குறிப்பிடத்தக்க இரு கூறாக அமைவன தூதும் மடலும். தலைவன், தலைவி சந்திப்புக்கு இடையூறு நேரும்பொழுது, தம் உள்ளக்கிடக்கையைத் தாம் விரும்பும் நபரிடம் வெளிப்படுத்தும் உதவி செய்வோரைத் தூதுவர் என்றழைப்பர். அவ்வகையில், நற்றிணையில் காணப்படும் தூதையும் மடலையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.