தொல்காப்பியமும் திருக்குறள் களவியலும்

Tolkappiyam and Tirukkural a comparative study

[ Published On: August 10, 2018 ]

உலக மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூல் திருக்குறளாகும். மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தது தொல்காப்பியம். மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாடல்களின் வழி எடுத்துக்காட்டியவர்கள் சங்கச் சான்றோர்கள். இதனை அடியொற்றியே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படும் திருக்குறளில் அறத்துப்பால், பொருள்பால், காமத்துப்பால் என்று மூன்று அதிகாரங்களாகப் பகுத்து மனித வாழ்வியலுக்கு அறம் படைத்துள்ளார் வள்ளுவர். கற்பு வாழ்க்கைக்கு முன்னதாக நிகழ்கிற வாழ்நிலையைக் களவு எனக் குறிக்கிறது தமிழ் இலக்கணம். இக்களவுவாழ்ச் சூழல் திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தில் எப்படிப் பயணிக்கிறது என்பதை இக்கட்டுரை முன்வைக்கிறது.

KEYWORDS

அறத்துப்பால், பொருள்பால், காமத்துப்பால், திருக்குறள், தொல்காப்பியம்
  • Volume: 4
  • Issue: 14

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline