• Phone: +919600370671
  • Email: editor@inamtamil.com

ISSN: 2455 - 0531

தூப்புக்காரி புதினத்தில் பண்பாடு – ஓர் ஆய்வு

CULTURE OF THUPUKKARI NOVEL

[ Published On: February 10, 2020 ]

“தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே  அவனுக்கோர் குணமுண்டு” (வெ.இராமலிங்கனார், தமிழன் இதயம் (1-2))

என்று நாமக்கல் கவிஞர் கூறியுள்ளார். அதை மெய்ப்பிக்கும் வகையில், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பண்பாடு இருப்பது போல தமிழர்களுக்கு என்று ஒரு தனித்தன்மையான  பண்பாடு உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், பண்பாடு என்னும் உணர்விற்குப் பெருமதிப்பு கொடுப்பவராகத் தமிழர்கள் விளங்கியுள்ளனர். அப்பண்பாட்டை நிலைநிறுத்த நஞ்சையும் உண்ணத் தயாரானவர்கள்  தமிழர்கள் இதைத்தான்,

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநாகரிகா்” (நற்றிணை, குறிஞ்சி 355 (6-7))

என்னும் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.  இவ்வளவு உயர்ந்த மதிப்பினை உடையவர்கள், ஆதலால், அப்பண்பாடு குறித்து இக்கால இலக்கிய வகையான புதினத்தில் ஆய்வை மேற்கொள்ள விரும்பிய நிலையில், தூப்புக்காரி என்னும் புதினத்தை ஆய்வுக்களமாகக் கொண்டு, அதில் பண்பாடு பற்றி ஆராய்வதே இக்கட்டுரை அமைகின்றது.

KEYWORDS

தூப்புக்காரி, புதினம், பண்பாடு, இனமுண்டு, தமிழர்.
  • Volume: 5
  • Issue: 20

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline