தீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகை விஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு

Tīrnta cuṉai, kāynta paṉai, nērnta viṉai - ottikai vijayyiṉ “māḷvuṟu nāṭakam" : Pārvaiyāḷar nōkku

[ Published On: August 10, 2018 ]

நவீன நாடகப்பரப்பில் பெரும் பங்காற்றிய மறைந்த பேராசிரியர் இராமானுஜம் அவர்களின் நேரடி சீடராக  “கைசிகை  ” நாடகத்திலும், “ நிஜ நாடகக் குழு” பேராசிரியர் மு.ராமசாமி அவர்களின் இயக்கத்தின்கீழ்ப் பல்வேறுபட்ட நாடகங்களிலும், நவீன நாடகத்தில் தனக்கெனத் தனிச் சொல்லாடலை வைத்திருக்கும் நாடகக் கலைஞர்  முருகபூபதி   அவர்களுடனும் இணைந்து பணியாற்றி தன்னைத்தானே செதுக்கிக்  கொண்ட நாடகக்காரர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கொண்டுவரப்பட்ட ” நாடகப் பயிற்சி ” திட்டத்தின்கீழ்ப் பயிற்சி பெற்ற கு.விஜயகுமார் தஞ்சைக்கு அருகில் உள்ள  பிள்ளையார்பட்டியைப்  பிறப்பிடமாகக் கொண்டவர். தமிழ்ப் பல்கலைக்கழக நாடகப் பயிற்சியில்  இவர் ஒருவர் மட்டுமே இன்னமும் நாடகத்தோடு பயணித்து இன்று குழந்தை நாடகக் கலைஞராக நவீன நாடகத் தளத்தில் முழுவீச்சோடு பயணித்து வருகின்றார். இவரின் குழந்தை நாடகங்கள்  டெல்லியில் உள்ள தேசிய நாடகப்பள்ளியில் நடத்தப்பட்ட சிறப்பை உடையது.

KEYWORDS

நவீன நாடகப்பரப்பில், இராமானுஜம், கைசிகை,
  • Volume: 4
  • Issue: 14

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline