தாளி(ழி)யூரில் பெருங்கற்காலத் தொல்லியல் தரவுகள் கண்டுபிடிப்பு

Tāḷi(ḻi)yūril peruṅkaṟkālat tolliyal taravukaḷ kaṇṭupiṭippu

[ Published On: May 10, 2019 ]

கோயம்புத்தூர் மாவட்டத்தின் பலவிடங் களில் பெருங்கற்கால எச்சங்கள் வரலாற்று ஆர்வலர்களால் தொடர்ச்சியாகக் கண்டறியப் பெற்று வருகின்றன. அவ்வரிசையில் பேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளி(ழி) யூர் கிராமத்தில் அமைந்துள்ள கோல்ராம் பட்டிக் கண்மாய்ப் பகுதியில் பெருங்கற்காலக் கல்திட்டைகளும் முது மக்கள் தாழிகளும்  இருப்பது அண்மையில் களஆய்வின்வழிக் கண்டறியப்பெற்றது. அரசுத்திட்டத்தின்கீழ் இக்கண்மாய்ப் பகுதியினைத் தூர்வாரும் பணி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்பொழுது இயந்திரங்களின் உதவியுடன் மண் அள்ளப்பெற்ற பொழுது பெருங்கல் திட்டைகள், முதுமக்கள் தாழி கள் வெளிப்பட்டன. உடைந்த நிலையில் பழமையான புழங்கு பொருட்களும்  பானை ஓடு களும் இப்பகுதியில் மிகுதி யாகக் கிடைக்கப் பெறுகின்றன. இவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை என்பதனை மேற்பரப்பாய்வில்  சேகரிக்கப்பெற்ற பளபளப்பான கருப்பு-சிவப்பு மண்பானை ஓடுகளும் கனமான வாய்ப்பகுதியினை உடைய முதுமக்கள் தாழிகளும் உறுதிப்படுத்துகின்றன. பளபளப்பு மிக்க சிவப்புப் பானை ஓடுகள் மீது வெண்ணிறக் கோடுகள் பூவேலைப் பாட்டுடன் வரையப் பெற்றுள்ளன.  பெருங்கற்காலப் பண்பாடு நிலவியிருந்த இத்தொல்லியல் களத்தினையும் அங்குக் கிடைக்கப்பெற்ற தரவுகளையும் அறிமுகப் படுத்தி விளக்குவதாக இவ்வாய்வுரை அமைகின்றது.

KEYWORDS

கோயம்புத்தூர், பெருங்கற்கால எச்சங்கள், பேரூர், தாளி(ழி)யூர், கோல்ராம்பட்டிக் கண்மாய்
  • Volume: 5
  • Issue: 17

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline