தவுட்டுக் குருவி’ எழுப்பும் கலகக்குரல்

Tavuṭṭuk kuruvi’ eḻuppum kalakakkural

[ Published On: May 10, 2018 ]

படைப்பிலக்கியம் என்பது மனித மனவுணர்வுகளின் உந்துதலால் வடிவமைக்கப்படுகிறது. இந்த உணர்வுகள் உரிமை வேட்கையின் தூண்டுதலால் எழும்போது இலக்கியவெளியில் பேரதிர்வை ஏற்படுத்துகின்றன. இதனடிப்படையில் இன்றைய தமிழிலக்கிய வெளியில் தலித்தியம் குறித்த படைப்புகள் விளிம்புநிலை மக்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை ஒடுக்கப்பட்ட பெருந்திரள் மக்களின் கலகக்குரலாக அமைந்துள்ளன. சமூகத்தில் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் வலிகளை வீரியத்துடன் எடுத்துரைக்கும் நோக்கில் பூமணி, கரு.அழ.குணசேகரன், சோ.தர்மன், சிவகாமி, பிரதிபா ஜெயச்சந்திரன், சுதாகர் கதக், சந்துரு, தய்.கந்தசாமி, மதிவண்ணன், ஸ்ரீதர கணேசன், பாப்லோ அறிவுக்குயில், பெருமாள் முருகன், ரவிக்குமார், விழி பா. இதயவேந்தன், அழகிய பெரியவன், உஞ்சைராசன், ராஜ்கௌதமன், அன்பாதவன், ஆதவன் தீட்சண்யா, அன்பழகன், பாரதி வசந்தன் எனப் பல்வேறு தலித் எழுத்தாளர்கள் சிறுகதை, புதினம், புதுக்கவிதை, நாடகம் என அனைத்துத் தளங்களிலும் முத்திரை பதித்து வருகின்றனர்.

இவர்களுள் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் தனது அனுபவ மொழியால் புதிய செல்நெறியை உருவாக்கியவர் எழுத்தாளர் பாமா. இவரின் ‘தவுட்டுக் குருவி’ எனும் சிறுகதைத் தொகுப்பின்வழி, தலித் மக்கள் எழுப்ப வேண்டிய கலகக்குரலைப் பதிவு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

KEYWORDS

தவுட்டுக் குருவி, தலித் மக்கள், இதயவேந்தன், அழகிய பெரியவன், உஞ்சைராசன்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline