தமிழ்க் காதலில் வ.சுப.மாணிக்கனாரின் ஆளுமைத் திறன்

Tamiḻk kātalil va.Cupa.Māṇikkaṉāriṉ āḷumait tiṟaṉ

[ Published On: February 10, 2017 ]

வ.சுப. மாணிக்கனார் ஆற்றிய தமிழ்த்தொண்டு அளவிடற்கரியது. தன்னைத் தோற்றுவித்த மொழிக்கு மூதறிஞர் என்று அழைக்கப்படும் வ.சுப. மாணிக்கனார் அன்போடு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். தமிழ்ப் புலமையின் மீதும்இ புலவர்களின் மீதும் கொண்ட விருப்பமே “தமிழ்க் காதல்” என்னும் நூலாக வடிவம் பெற்றுள்ளது. அகத்திணை ஆராய்ச்சியை மேற்கொண்ட அவர்இ தமிழ் இலக்கியத்தில் தோய்ந்துஇ மூழ்கி வெளிக் கொண்டுவந்துள்ள கருத்துக்கள்இ அனுபவங்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கும் கருத்துக் குவியல்களே “தமிழ்க்காதல்“ என்னும் நூல். தமிழ் அறிஞர்களுக்கும்இ ஆர்வலர்களுக்கும்இ மாணிக்கனாரை நாம் அடையாளம் காட்டத் தேவையில்லை. அவ்வாறு இவரைச் செய்யப் புகுவோமானால் அது குன்றின் மேலிட்ட விளக்கைக் கைவிளக்கால் சுட்டிக் காட்டுவது போல் முடியும். வ.சுப. மாணிக்கனாரின் ”தமிழ்க் காதல்” என்னும் நூலில் அவரின் ஆளுமைத்திறனை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

KEYWORDS

தமிழ்க் காதல், அனுபவங்கள், ஆளுமைத்திறன், வ.சுப. மாணிக்கனார், தமிழ்த்தொண்டு
  • Volume: 2
  • Issue: 8

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline