ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும் : மதிப்பீட்டாய்வு

History of Tamil Nadu - People and Culture: Review

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The paper to evaluates the research work entitled tamiḻaka varalāṟu makkaḷum paṇpāṭum, the author of K.K.Pillai. The structure of the text and its features, quality of its research, chronological order of the ancient Tamil texts, archeological evidence, proudness of ancient Tamil culture of all elements is evaluates by the scholar as well as life and service of the author.

Abstract (Tamil):

உலகில் மனிதன் முதன் முதலாகத் தோன்றிய இடங்களில் தமிழகமும் ஒன்று. எனவே, இது பழம் சிறப்பு வாய்ந்தது. எத்தனையோ குலமரபுகளும், ஆட்சியாளர்களும் தமிழ்நாட்டை ஆட்சி செய்துவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால் அவ்வரலாறுகளை எல்லாம் இன்று வரை முழுமையாய் அறியக்கூடவில்லை. நடந்து முடிந்த நிகழ்வுகளை முறையாகப் பதிவு செய்து அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற உணர்வு நம் முன்னோர்களிடம் இல்லை. மேலும் பழந்தமிழர் வரலாற்றைச் சங்க காலம் தொடங்கி மட்டுமே அறிய முடிகின்றது. அதற்குமுன் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நம் முன்னோர் பற்றி ஒன்றும் அறிவதற்கில்லை. சங்க காலம் பற்றிக்  கூட இலக்கியங்களைக் கொண்டு தான் அறிய முடிகின்றது. மேல் நாடுகளில் கால வரன்முறை (Chronology) என்ற ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்புகளைப் பதிவு செய்து விட்டுச் சென்றுள்ளனர். எனவே, அதன் துணையுடன் அங்கு எளிதில் வரலாற்றைப்  படைக்கின்றனர்.

இதுபோன்ற வசதி நமக்கு இன்மையால் பழம்பெருமை மிக்க தமிழரின் வரலாற்றை முழுமையாகப் படைக்க இயவில்லை. அங்கொன்றும் இங் கொன்றுமாய் வரலாற்றை எழுதிவிட்டுச் சென்றனரேயன்றி, முழுமையான நம்பத் தகுந்த தமிழர் வரலாறு நெடுங்காலம் படைக்கப்படாமலிருந்தது. இக்குறையைப் போக்க எழுந்த நூலே கே. கே. பிள்ளை அவர்கள் எழுதிய “தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும்” என்ற நூலாகும். தன் காலம் வரை கிடைத்த அத்துணை ஆதாரங்களையும் தொகுத்து முதன் முறையாக விஞ்ஞானப் பூர்வமான வரலாற்றை அவர் படைத்தார். இதற்கு முன்னும் பின்னும் எத்தனையோ நூல்கள் தோன்றினாலும் ஒன்றுகூட இந்நூலுக்கு இணையாகவில்லை. தமிழக வரலாற்றைப்  படைக்கும் மிகவும் சவாலான, சிக்கலான பணியை மிகவும் திறமையுடன் கையாண்டு சிறப்புமிகு இந்நூலைத் தமிழ்கூறும் நல்லுலகிற்குப்  படைத்தளித்தார்.

Keywords

தமிழக வரலாறு, மக்களும் பண்பாடும், மதிப்பீட்டாய்வு, கே.கே.பிள்ளை, ஆக்ஸ்போர்டு, வரலாற்றுத் துறை

references

பிள்ளை, கே. கே., 2013, தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

citation

கயல்விழி மு., (February 2021), “தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும் : மதிப்பீட்டாய்வு (History of Tamil Nadu – People and Culture: Review)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.

Sign In

Author access is disabled