காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்ற காலங்களிலேயே ஐயா ச.வே.சு. அவர்களை நாங்கள் நன்கு அறிவோம். சில ஆய்வரங்குகளுக்கு வருகை தரும் ஐயா அவர்களின் சரளமான தமிழ் அனைவருக்கும் புரியும் வகையில் அமையும். நூறோடு ஒருவராக இருந்து அவரின் பேச்சைக் கேட்கும் அனுபவம்தான் காரைக்குடியில் இருந்த காலங்களில் எனக்குக் கிடைத்தது என்றாலும், முனைவர் பட்டம் செய்யும் போது எழுதப்பெற்ற நூலால் தான் அவரிடம் நெருங்கிப் பேசும் அனுபவமும் எனக்குக் கிடைத்தது.