சு.தமிழ்ச்செல்வியின் ‘கீதாரி’ நாவலில் தகுபுணர்ச்சிக் கோட்பாடு

The theoretical theory in 'Geetari' novel by Thamizhaldevi

[ Published On: February 10, 2019 ]

யாருக்காகவும் பாசாங்கு செய்துகொள்ளாத எழுத்து சு.தமிழ்ச்செல்வியினுடையது. தனது எழுத்துப் பயணத்தில் தொடர்ந்து காத்திரமாகவே எழுதிவரும் சு.தமிழ்ச்செல்வி அவர்களின்  கீதாரி நாவலானது சமூகம் கட்டமைத்த பாலியல் ஒழுக்கங்களைக் கேள்வி கேட்கும் படைப்பாக அமைந்துள்ளது. பொதுவாகவே ஒரு சமூகம் தனக்கென தனிப்பட்ட  பாலியல் கோட்பாடுகளை வகுத்து அதன்படி மக்களை வாழ நிர்பந்திக்கும். அச்சமூகம் கட்டமைத்த கோட்பாடுகள் ஒரு படைப்பாளியின் எழுத்துக்களால் தகரும்போது அச்சத்தின் அதிர்வுகள் அனைவருக்குமானதாக இருக்கும். காரணம் அதுவரை தாங்கள் பின்பற்றி வந்த அல்லது பாதுகாத்து வந்த சிந்தனைக் கோட்பாடு அதனோடு தொடர்புடைய நடைமுறைப் பழக்கவழக்கங்கள் இனி தொடராது என்ற முடிபும் அதன் பயனாகத் தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த பெண் உடல்சார்ந்த புனைவுகள், பெண் உடல்மீது கட்டி எழுப்பப்பட்ட ஆணுக்கான உரிமை கட்டுமானங்கள் தகர்ந்துவிடும் என்பதால். இங்கு தகர்தல் என்பது ஆண் தனது அதிகாரத்தின் பிடியில் வைத்துப் பாதுகாத்த பெண்ணின் மீதான உரிமையின் தளர்வாகவும்  கொள்ளலாம்.

KEYWORDS

Novel, சு.தமிழ்ச்செல்வி, கீதாரி, நாவல், தகுபுணர்ச்சிக் கோட்பாடு.
  • Volume: 4
  • Issue: 16

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline