சிலப்பதிகாரமும் அரும்பதவுரைகாரரும்

Cilappatikāramum arumpatavuraikārarum

[ Published On: May 10, 2018 ]

காப்பியங்கள் காலத்தைக் கடந்து கருத்துக்களைத் தாங்கிச் செல்லும் வரலாற்றுப் பெட்டகமாகும்.  பழந்தமிழ்க் காப்பியங்களுக்கு உரையாசிரியா்கள் செய்துள்ள தொண்டு அளப்பரியது.  அவ்வகையில் காப்பியத்திற்குத் தொண்டாற்றிய புலமைச் செல்வா்களை நூலாசிரியா், உரையாசிரியா், கற்பிக்கும் ஆசிரியா் என மூவகைப்படுத்தலாம்.  இம்மூவருள் நூலாசிரியரின் உள்ளக்கிடக்கையை உய்த்துணா்ந்து கற்பிக்கும் ஆசிரியா்களுக்குத் தெளிய அறிவிக்கும் நுண்மாண் நுழைபுலமும் சொல்வளமும் ஒரு சேரப் பெற்றவா்கள் உரையாசிரியா்களேயாவா். அத்தகைய உரையாசிரியரான அரும்பத உரைகாரரின் வரலாறு, இவா் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதுவதற்கான காரணம், அதற்கான சமூகப் பின்புலங்கள் போன்றவற்றினை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

KEYWORDS

உரையாசிரியா், அரும்பத உரைகாரர், நூலாசிரியா், சமூகப் பின்புலங்கள், நுண்மாண்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline