சிற்றிலக்கிய வகை, வகைமைச் சிந்தனைகள்

Idea’s of literary genres

[ Published On: May 10, 2019 ]

பழந்தமிழ் இலக்கியங்களைப் பேரிலக் கியங்கள் என்று அழைப்பதைப் போல் பேரிலக்கியங்களிலிருந்து தோன்றிய இலக்கியங்களைச் சிற்றிலக்கியங்கள் என்று வகைப் படுத்திக் கூறலாம். யாப்ப மைப்பில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய தன்மைகள் முழுதும் உள்ள டங்கித் தோன்றியவையெல்லாம் பேரிலக் கியங்களாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான காப்பியங்கள் இதற்குச் சான்றாகும். யாப்பமைப்பு மாறுபட்டு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய தன்மைகளில் ஏதேனும் ஒரு கூறினுள் சிறுபகுதியை மட்டும் அடிப்படை யாகவும், கடவுளர்கள், மன்னர்கள், கொடை வண்மையில் சிறந்த வள்ளல்கள், புகழில் நிலைக்கும் தலைவர்கள் போன்ற பிறவுமான ஒருவரின் வாழ்வின் சிறுபகுதியை மட்டும் பாடுபொருளாகவும் கொண்டவை சிற்றிலக் கியங்கள் என்பதன் பாற்படும். இதனை, பிரபந்தங்கள் என்றும் அழைப்பதுண்டு. கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் தமிழில் சிற்றிலக்கிங்கள் வளரத் தொடங்கி எண்ணிக்கையில் அடங்காத இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இவற்றில் பிள்ளைத்தமிழ், தூது, உலா, பரணி, அந்தாதி, கோவை, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, மடல், மாலை, சதகம், வெண்பா, தொகை போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. உலகியல் கடந்த கற்பனை நிகழ்ச்சிகளும், புராணக் கதைகளும், உயர்வுநவிற்சி அணிகளும், திரிசொல்லாட்சிகளும், இல்பொருள் உவமை களும் நிறைந்து சிற்றிலக்கியங்களை வளம் சேர்க்கின்றன. சிற்றிலக்கியங்களைத் தொண் ணுற்றாறு வகைப்படும் என்று இலக்கண நூல்களும், பாட்டியல் நூல்களும் குறிப்பிடுகின்றன. பன்னிரு பாட்டியல், வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் போன்ற பாட்டியல் நூல்கள் சிற்றிலக்கியத்திற்கு இலக்கணம் கூறுபவை. இவற்றில் தொண்ணூற்றாறு வகை பிரபந்தங்கள் என்று குறிப்பிடுகிறதே தவிர, அவற்றினைப் பற்றிய பட்டியல்களைக் குறிப்பிடவில்லை. தொண்ணூற்றாறு என்ற வரையறைக்குள் அடங்காத நொண்டி நாடகம், கப்பற்பாட்டு, ஆநந்தக் களிப்பு, கிளிக் கண்ணி, விலாசம் புலம்பல் உந்தி பறத்தல், சாழல், தெள்ளேணம், வள்ளைப்பாட்டு, கவசம், ஓடப் பாட்டு, காதல், ஏற்றப்பாட்டு முதலான பல சிற்றிலக் கியங்கள் உள்ளன. இத்தகைய கருத்து நிலைகளில் சிற்றிலக்கியங்களின் வகை எண்ணிலடங்காதது எனத் தெரிகிறது. இத்தகைய சிற்றிலக்கியங்கள் முகிழ்த்தது என்பது பண்டைய இலக்கண, இலக்கிய நூல்களாலேயே என்பதனை இக்கட்டுரை நிறுவ முயலுகிறது.

KEYWORDS

பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல்.
  • Volume: 5
  • Issue: 17

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline