சிந்துவெளி – பெருங்கற்காலத் தரவுகளை முன்வைத்துப் பாண்டியரின் தொன்மங்கள்

(Pandiyas myth based on the Indus civilization – Megalithic evidences)

[ Published On: August 10, 2019 ]

இந்திய மரபில் தங்களின் இருப்பை முதன்மைப்படுத்திக் கொள்ள முனையும் பெரும்பாலான இனங்கள் தங்களுக்கான வரலாற்றாவணங்களாகத் தொன்மக் கதையாடல்களை முன்னிறுத்துகின்றன.  குறிப்பிட்ட தேசிய இனங்கள் அல்லது  சிறிய அளவிலான இனக்குழுக்களின் வரலாற்றைக் கட்டமைக்கத் துணைபுரியும் சான்றுகளில் இத்தொன்மங்கள் மட்டும் தற்காலத்திலும் வாய்மொழிக் கதைகளாக வழங்கப்பெற்று வருகின்றன. இசுலாமிய மற்றும் கிறித்தவ வேதாகமங்களின்வழி அறியப்படுகின்ற பழமரபுக் கதைகள், சமற்கிருத வேதபுராணக் கதைத் தொன்மங்கள் ஆகியன பிரளயத்திலிருந்து மனித இனத்தைக் காத்துநின்ற தத்தம் கடவுளர்களில் இருந்து உலகம் தொடங்குவதாகக் குறிப்பிடுகின்றன. இவ்வகையான தொன்மக் கதையாடல்களின் மூலத்தில் அடர்த்திகுறைந்த ஓர் உண்மையான வரலாற்று நிகழ்வொன்றும் அமைந்திருக்கும். அதேவேளையில் தொன்மங்கள் அவ்வுண்மையான வரலாற்று நிகழ்வினை முழுமையாக விழுங்கிக் கொண்டிருக்கும் பேராபத்தும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு விழுங்கப்பெற்ற ஆதியினங்களின் வரலாறு இந்தியத் துணைக்கண்டத்தில் மிகுதி. அவ்வரிசையில் பாண்டியர் என்ற தொல்லினக் குழுவினர் தவிர்க்கவியலாதவர்களாய் அமைகின்றனர். வரலாற்றுக் கட்டமைப்பின் மூலப்பொருள்களாகக் கருதப்பெறும் எழுத்தாவணங்கள், இலக்கியச் சான்றுகள், தொன்மங்கள் ஆகியனவற்றின் அடிப்படையில் இந்தியத் துணைக்கண்டத்தின் மிகுதொன்மையுடைய மரபினர்களாய்ப் பாண்டியர்களை முன்னிறுத்த முடியும். ஏனெனில் வரலாற்றின் பழமையான எழுத்தாவணங்களும் வரலாற்றிற்கு முந்தைய எழுத்தற்ற வாய்மொழி ஆவணங்களும் பாண்டியர்களோடு மட்டும் பெரிதும் தொடர்புடையனவாகக் காணப்பெறுகின்றன. பழமரபுக்கதைகள் குறிப்பிடும் கடல்கோள் (பிரளயம்-பெருஞ்சுனாமி), தோணி(மீன்) குறித்த தொன்மக் கூறுகளோடு பாண்டிய மன்னர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதனை வரலாற்றுத் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இவற்றைச் சிந்துவெளி மற்றும் பெருங்கற்காலத் தரவுகளுடன் ஒப்பிட்டு இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வகுடிகளாக விளங்கியவர்கள் பாண்டியர்கள் என்பதை நிறுவுவதாக இவ்வாய்வுரை அமைகின்றது.

KEYWORDS

இந்திய மரபில், பழமரபுக் கதைகள், பூர்வகுடிகள், பாண்டியர்கள், தொன்மங்கள்
  • Volume: 5
  • Issue: 18

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline