சமயங்கள் கூறும் விலங்குகளின் தெய்வீகத் தன்மைகளும், மீறப்படும் விதங்களும் – விலங்குரிமை ஒழுக்கவியலை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு

Divine characteristics of the animals, and the breach of the animals - a study based on animal ethics

[ Published On: November 10, 2018 ]

மனித வாழ்வினை நல்வழிப்படுத்த சமயங்கள் பெரிதும் உதவுகின்றன. இவ்வாழ்வில் விலங்குகள் பின்னிப்பிணைந்தவை. ஆரம்பகாலம் தொடக்கம் இன்று வரை  விலங்குகள் மனித தேவைகளுக்கு பயன்பட்டு வருகின்ற அதேவேளை இன்றைய உலகில் அவை அதிக நெருக்கடிக்குள்ளாகி கொல்லப்படுவது தொடக்கம் துரத்தப்படுதல், துன்புறுத்தல் என முற்றிலும் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலைப்பாட்டை தெளிவுபடுத்திக் காட்டும் நோக்கில் விலங்குரிமை ஒழுக்கவியல் தோற்றம் பெற்றது. இந்துமதத்தில் விலங்குகள் தெய்வீகத்தன்மையுடையதாகவும், சிறந்த செல்வமாகவும் போற்றி வழிபடப்பட்டது. விலங்குகளை கௌரவித்தல் தொடக்கம் விலங்குப்பாதுகாப்பு முதலான விடயங்களை எடுத்துக்கூறுகின்றது. ஆனாலும் மிருகபலி என்பது இம் மதத்தில் இன்றுவரை தடை செய்யப்படாததொரு விடயமாக உள்ளமை விலங்குரிமை மீறலாகவே கொள்ளப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தில் விலங்குகளுக்கு இடையில் நெருக்கமான ஓர் உறவு பேணப்படுகின்ற அதேவேளை தேவை கருதி விலங்குகளைப் பயன்படுத்தல், வேட்டையாடுதல், பலியிடுதல் முதலான செயற்பாடுகளில் விலங்குரிமை மீறல்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீறப்படுகிறது. பௌத்தமதம் பலியிடுதலுக்கு எதிரான கருத்துக்கள், விலங்கு பாதுகாப்பு முதலான விடயங்கள் தொடர்பாக பேசுகிறது. உதாரணம் பௌத்த நூலான தம்ம பதத்தில் உயிர்க்கொலை வன்மையாகக் கண்டிக்கப்படுவதனைக் காணலாம். ஆனாலும் புலாலுண்ணாமையைக் கண்டிக்காமல் இருப்பது இம்மதத்தில் பாரிய குறைபாடாகவே இருந்து வருகிறது. ஜீவகாருண்யத்திற்கு முதன்மையளிக்கும் மதமாக இஸ்லாம் மதம் விளங்குகிறது. மனித வாழ்விற்கு அவசியமான நீர், காற்று, மரம், செடி கொடிகள், பூச்சியினங்கள,; விலங்குகள் முதலியவற்றை ஒரே குடும்பமாகவே இஸ்லாம் நோக்குகிறது. “படைப்புகள் அனைத்தும் அல்லாவின் குடும்பம் என்பதால் குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவன் அவனின் படைப்பில் விருப்பத்;திற்குரியவனாக கருதப்படுவான்” என்கிறது.ஆனாலும் இம் மதத்தில் அதிகளவில் மிருகவதை இடம் பெறுகின்றமையைக் காணலாம். இத்தகைய நிலைப்பாடுகளை தெளிவுபடுத்துவதாகவே  இவ் ஆய்வு அமைந்துள்ளது.

KEYWORDS

Dampapatham, Killing, இந்து சமயம், இஸ்லாம், கிறிஸ்தவம்
  • Volume: 4
  • Issue: 15

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline