சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள்

Caṅka ilakkiya neytal tiṇaip pāṭalkaḷil varalāṟṟuk kuṟippukaḷ

[ Published On: May 10, 2018 ]

ஒரு நாட்டின் வரலாற்றினை நன்கறியத் துணைபுரிவனவற்றுள் சிறப்பு மிக்கவை அந்நாட்டு இலக்கியங்கள். சங்க இலக்கியங்களில் மூவேந்தர்கள், சிற்றரசர்கள், வள்ளல் பெருமக்கள் ஆகியோர் பற்றிய செய்திகளும் அந்நாளைய பழக்க வழக்கங்களும், பழம் பெரும் நகர்கள் பற்றிய குறிப்புகளும் இன்னபிற செய்திகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. அவற்றுள் நெய்தல் பாடல்களுள் காணப்படுவனவும், ஏனைய திணைகளில் காணப்படும் நெய்தல் நிலச் சார்புடையனவுமான செய்திகளில், குறிப்பிடத்தக்கன ஈண்டு அடையாளப்படுத்தப் படுகின்றன. நெய்தல் நிலத்தே பல போர்கள் நடந்துள்ளன. நெய்தல் நிலம் போர்க்களமாயிருந்ததற்குச் சாலச் சிறந்த இடமாகும். ‘தும்பை தானே நெய்தலது புறனே’ என்னும் தொல்காப்பியச் சூத்திர உரையில், ‘இருபெரு வேந்தரும் ஒரு களத்துப் பொருதலின் அதற்கு இடம் காடும் மலையும் கழனியும் ஆகாமையானும், களரும் மணலும் பரந்த வெளி நிலத்துப் பொருதல் வேண்டுமாதலானும், அந்நிலம் கடல் சார்ந்த வழியல்லது இன்மையானும்’ இளம்பூரணரும் போர்க்களமாயிருந்ததற்கு நெய்தலே சாலச் சிறந்தவிடம் என்ற கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். பல போர் நிகழ்ச்சிகள் நெய்தலில் காணப்படுகின்றன. அப்போர் நிகழ்ச்சிகளையும், பிற சிறப்புச் செய்திகளையும் ஈண்டுக் காண்போம்.

KEYWORDS

மூவேந்தர்கள், சிற்றரசர்கள், வள்ளல், பழக்க வழக்கங்களும், பழம் பெரும் நகர்கள்
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline