சங்க இலக்கியத்தில் உரல், உலக்கையின் பயன்பாடு

Mortar and pestle are still employed in parts of Tamil Classical Literature

[ Published On: November 10, 2018 ]

பண்பாடு என்பது பண்படுதல் என்ற சொல்லிலிருந்து தோன்றிய வழக்காகும். மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் பண்பாடு என்பது மறைந்திருக்கிறது. அது அனிச்சைச் செயலாக, தத்தமக்கான சூழ்நிலை ஏற்படும்போது, மனிதரிடமிருந்து தானே வெளிப்படுகிறது. இப்பண்பாடு ஒவ்வோர் இனம், சமூகம், மொழி சார்ந்து சில சிறப்புப் பண்புகளைக் கொண்டு அமைகின்றது. ஒரு சமூகத்தின் பண்பாட்டினைப் பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம். மக்களிடம் மேற்கொள்ளப்படும் களப்பணி, கல்வெட்டுகள், அரசு ஆவணங்கள், இலக்கியங்கள், தொல்லியல் ஆய்வுகளின் மூலம் கிடைக்கும் புழங்குபொருட்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமூகப் பண்பாட்டினைக் கட்டமைக்க முடியும். அவ்வகையில் சங்க இலக்கியங்களில் பயின்று வரும் புழங்குபொருட்களான உரலையும் உலக்கையும் அடிப்படையாகக் கொண்டு சங்ககாலப் பண்பாட்டினைக் கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டு அமைகின்றது இக்கட்டுரை. இப்பொருள்சார் பண்பாட்டின் மூலம் சங்க இலக்கியத்தில் உரலும் உலக்கையும் என்ற புழங்குபொருள்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன?  எவ்வாறு எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்ற இரண்டு நிலைகளைப் புரிந்துகொண்டால் புழங்குபொருள் பண்பாட்டை முழுவதுமாகப் புரிந்துகொள்ள இயலும் என்ற நோக்கில் இக்கட்டுரை அமையப் பெற்றுள்ளது.

KEYWORDS

Sangam Literature, Fiberglass, Factories, உரல், உலக்கை
  • Volume: 4
  • Issue: 16

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline