சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ள அகவாழ்வின் மறுபக்கங்கள்

On the other side of livelihood are recorded in Sangam literature

[ Published On: May 10, 2019 ]

பண்டைத் தமிழரின் வாழ்வியல் கூறுகளான காதல் x வீரம் (அகம் x புறம்) என்பதில் முன் நிற்பது காதலே ஆகும். காதல் என்பது அக வாழ்வையும் வீரம் என்பது புற வாழ்வையும் குறிக்கும். “ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த”1 இந்த அக ஒழுக்கம் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாய்ப் போற்றப் படும் சிறப்பைக் கொண்டுள்ளது. இது சங்க இலக்கியத்தை வாசித்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த ஒழுக்கநெறி சங்க காலத்தில் ஆண் பெண் இடையே அன்பின் ஐந்திணை என்ற கோட்பாட்டில் கூறப்படுவது போல் மட்டும்தான் உள்ளதா? அல்லது அதற்கு மாறான வெளிப்பாடுகள் பாடல்களில் நுட்பமாகக் கூறப்பட்டுள்ளனவா? அக் காலத்தில் இரு பாலினத்தினரும் ஒரே விதமாக உண்மையுடன்தான் காதலித் தார்களா? காதலித்த பின்னர் சாதி, பொருளாதாரம் முதலான ஏதாவது காரணங் களுக்காகக் காதலைக் கைவிட்டதற்கான குறிப்புகள் ஏதாவது உள்ளனவா? பண்டைக் காலச் சமூகம் காதலை எவ்வாறு எதிர்நோக்கியது? காதலின் மறுபக்கம் என்று கூறத்தக்கன என்று இன்னும் வேறு எவையேனும் உண்டா? என்பன போன்ற கேள்வி களுக்கான விடைதேடும் சிறு முயற்சியை மேற்கொள்கிறது இக் கட்டுரை.

KEYWORDS

Sangam Literature, Love, சங்க இலக்கியங்கள், அகவாழ்வின் மறுபக்கங்கள், யாயும் யாயும்
  • Volume: 5
  • Issue: 17

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline