காலத்துக்குக் காலம் மாறும் கலைப்பாணிகள்

Artworks that change from time to time

[ Published On: August 10, 2018 ]

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலக”த்தில் செங்கோலோச்சிய மன்னர் பெருமக்களின் சமயப் பற்றினாலும், கலையார்வத்தினாலும், எண்ணிறந்த சிற்பங்கள், ஓவியங்கள் நிறைந்த திருக்கோயில்கள் நம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. காவியப் புகழ்பாடும் அக்காலக் கலைவிற்பன்னர்கள் உயிரில்லாப் பொருள்களாகிய கல்லினையும், உலோகத்தினையும், வண்ணங்களையும் கொண்டு உயிரோட்டம் பெற்ற சிற்பங்களையும் எழிலுறச் சமைத்துத் தமிழ் மண்ணிற்குக் காணிக்கையாகப் படைத்துள்ளனர். சங்ககாலத்திலேயே தமிழகம் கட்டட, சிற்ப, ஒவியக் கலைகளில் சிறந்து விளங்கியிருந்ததை அக்கால இலக்கியங்கள் இனிது எடுத்தியம்புகின்றன. கி.பி.10ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து கி.பி.12ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான காலத்தில் வார்க்கப்பட்ட செப்புத்திருமேனிகளை நிறுவி அது தொடர்பான செய்ததிகளைக் கல்லில் பொறித்து வைத்துள்ள செய்திகளை முதலாம் பராந்தகன் காலத்திலிருந்தே காண முடிகின்றது. இத்தகு சோழர்காலத்துப் படிமங்களின் முகம் உருண்டு திரண்டு விளங்கும். அதே சமயம் பாண்டிய நாட்டுப் படிமங்களில் முகமானது நீண்டும் ஒடுங்கியும் இருக்கும். விசயநகர நாயக்கர் காலத்திலும் இத்தகு படிமக்கலை தொடர்ந்து நிலை பெற்றிருந்தது. இவ்வாறு ஒவ்வொரு காலத்திலும் படிமங்களில் கலைப்பாணிகள் வேறுபட்டு இருந்தது. அத்தகைய கலைப்பாணிகளை அறிவது இவ்வாய்வின் நோக்கமாகும்.

KEYWORDS

வடவேங்கடம், தென்குமரி, சிற்பங்கள், ஓவியங்கள், கலைவிற்பன்னர்கள்
  • Volume: 4
  • Issue: 14

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline