ISSN: 2455 - 0531

Inam International E-Journal of Tamil Studies

கல்வெட்டில் பெண்கள் பற்றிய நூல்களுக்கான ஆய்வடங்கல்

Study for books on women in inscription

Article Authors

Full Text

share it

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email
Share on whatsapp

Abstract (English):

The research paper entitled kalveṭṭil peṇkaḷ paṟṟiya āyvaṭaṅkal about the review on three books which are taḷiccērik kalveṭṭu, tamiḻakak kalveṭṭukaḷil peṇkaḷ, kalveṭṭukaḷil tēvatāci, a review of the position of women in their articles.

Abstract (Tamil):

ஆய்வடங்கல்’ என்பது, அகராதியியல் துறை அறிஞர்களின் சிந்தனைவழி உருவான ஆய்வுக்களம். இது, குறிப்பிட்ட ஒருவர் பற்றிய நூல்களையோ, ஒரு குறிப்பிட்ட பொருண்மை சார்ந்த நூல்களையோ அடிப்படையாகக் கொண்டு அமையும். இரு வகைக்கும் கால எல்லை பற்றிய தெளிவு இருத்தல் வேண்டும். நூல்களின் பதிப்பு விவரங்களை மட்டும் சேகரித்து ஆய்வடங்கல் அளிக்கலாம். இது, துணை நூற்பட்டியல் போன்று அமைந்துவிடும். கூடுதலாக நூல் பற்றிய விவரங்களைக் குறிப்புகளாக அளித்தால், அதன் பயன்பாட்டு எல்லை மிகும். இதுவே குறிப்புகளைத் திறனாய்வு நோக்கில் விரிவு செய்து அளித்தால் அந்த ஆய்வடங்கல் இன்னும் கூடுதல் பயனளிப்பதாக அமையும். துணைநூற்பட்டியல் போன்ற அடைவுகள், உருவாக்குபவரால் எவ் வகையான மதிப்பீட்டுக்கும் ஆட்படுத்தப் பெறுவது  இல்லை. நூல் பற்றிய சிறு விவரக் குறிப்புகளுடன் உருவாக்கப் பெறும் அடைவுகள், அந்த அடைவு சார்ந்த உள்ளார்ந்த வளர்ச்சிப் போக்கைச் சுட்டிக் காட்டும் வகையில் அமையும். இதனால், மேற்கொண்டு அத்துறை சார்ந்த, அந்த அறிஞர் சார்ந்த ஆய்வுகளை முன்னெடுக்கும் சூழல்  உருவாகும். அடங்கலைப் பயன் படுத்துவோர் குறிப்பிட்ட நூல்களைத் தேர்வு செய்து  பயன்படுத்தவும் மேற்கொண்டு அத்துறையில் பணியாற்றவும் திறனாய்வு நோக்கில் அமையும் ஆய்வடங்கலே பெரிதும் உதவும். எவ்வகை அடங்கலாக இருப்பினும் அது கட்டாயம் ஏதேனும் ஒரு நிரல் முறைக்கு உட் பட்டதாக அமைதல் வேண்டும். அது ஆசிரியர் அகர வரிசையில் அமையலாம் அல்லது காலவரிசையில் அமையலாம். எவ் வகையிலான அடங்கலாக இருப்பினும், நூலாசிரியர், நூல் தலைப்பு, பக்கஅளவு, விலை, பதிப்பகம்  முதலானவற்றைக் குறிப்பிட்ட நெறிமுறையில் அளித்தல் வேண்டும். இந்நிலையில் இக்கட்டுரை, திறனாய்வு நோக்கிலான ஆய்வடங்கலை அமைத்துக் காட்டுகின்றது. இதற்குக், கல்வெட்டுகளில் பதிவான  பெண்களைப் பற்றிப் பேசும் நூல்கள் களமாக அமைகின்றன. இப்பொருமைக்குரிய நூல்களாக மூன்று மட்டுமே கிடைக்கின்றன.

Keywords

கல்வெட்டில் பெண்கள், ஆய்வடங்கல், ஆய்வுக்களம், திறனாய்வு, நூலாசிரியர், நூல் தலைப்பு

references

கலைக்கோவன் இரா., & நளினி மு., 2002, தளிச்சேரிக் கல்வெட்டு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
சாந்தினிபீ எஸ்., 2019, கல்வெட்டுகளில் தேவதாசி, விஜயா பதிப்பகம், கோயமுத்தூர்.
நடராஜ் வி.(மொ.பெ.), 2003, தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள், விடியல் பதிப்பகம், கோயமுத்தூர்.

citation

அறவேந்தன் இரா., (February 2021), “கல்வெட்டில் பெண்கள் பற்றிய நூல்களுக்கான ஆய்வடங்கல் (Study for books on women in inscription)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25, pp.9-15

Sign In

Author access is disabled