இந்திய இலக்கியத்தில் அறநூல்களுக்குத் தனிச்சிறப்பிடம் உண்டு. மக்கள் நலமுடன் வாழவேண்டுமென்ற சிந்தனையில் அந்தந்த மொழிகளில் அறநூல்கள் காணப்படுகின்றன. தமிழில் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறளையும், தெலுங்கில் பத்தெனவால் (கி.பி.12ஆம் நூ.) இயற்றப்பெற்ற சுமதிசதகம் என்ற அறநூலையும் ஒப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது. இவ்விரு நூல்களின் காலம், நூல் தோன்றியதற்கான காரணம், நூலின் கட்டமைப்பு, நூலில் உள்ள கருத்தியல்கள், அக்கருத்தியல்களை வெளிப்படுத்தக் கையாண்ட உத்திகளையும் விளக்கப்பட்டுள்ளன. மேலும், இரு நூல்களிலும் காணப்படும் கருத்தியல் ஒற்றுமை, கருத்தியல் வேற்றுமை, வேற்றுமையில் ஒற்றுமை, ஒற்றுமையில் வேற்றுமை, பிறமொழித் தாக்கம் போன்ற செய்திகளையும் விளக்குவதாக அமைகிறது.