ஒப்பியல் நோக்கில் நளன் கதையும் கதைவடிவங்களும்

Oppiyal nōkkil naḷaṉ kataiyum kataivaṭivaṅkaḷum

[ Published On: May 10, 2018 ]

எந்தவோர் இலக்கியமானாலும் அதற்கு மையமாக விளங்குவது கதைக்களன் எனலாம். அக்கதையானது ஏதேனும் உண்மைப் பொருளையோ, அறக்கருத்துக்களையோ அடிக்கருத்தாய்க் கொண்டு விளங்கும். அத்தகைய கதைகளில் படைப்பாளன் தன் அனுபவத்தினால் தான் வாழ்ந்த காலச்சூழலையும் அடிப்படையாகக்கொண்டு தனது படைப்பில் சிறந்த கருவினை அமைக்கிறான். கதைக் கருவினை வாசகனுக்கு உணர்த்த பல்வேறு நிகழ்ச்சிகளைக் கட்டமைத்து ஒரு படைப்பாக வெளியிடுகிறான். இத்தகைய படைப்புக்கள் காலந்தோறும் சிற்சில மாற்றங்களைப் பெற்று வருவது இயல்பு. அவ்வகையில் தமிழில் புகழேந்திப் புலவர் எழுதியுள்ள நளவெண்பா, வடமொழிக் காப்பியத்தை மொழிபெயர்த்து எழுதிய அதிவீரராம பாண்டியரின் நைடதம், மலையாள மொழியில் உன்னை வாரியர் (UNNAYI WARRIYAR) எழுதிய நளசரிதம் இன்றும் நடப்பில் உள்ள நளன்கதை ஆகியவற்றை ஒப்பியல் நோக்கில் ஆய்ந்து அக்கதைகளையும் கதை வடிவங்களையும் கண்டறியும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

KEYWORDS

கதைக்களன், படைப்பாளன், கதைக் கரு, புகழேந்திப் புலவர், நளவெண்பா
  • Volume: 4
  • Issue: 13

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline