ஏரெழுபது: உள்ளும் புறமும்

Ēreḻupatu: Uḷḷum puṟamum

[ Published On: November 10, 2015 ]

இலக்கியம் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி’ என வருணிக்கப்படுவதுண்டு. கண்ணாடி, எந்தக் கோணத்திலிருந்து பிடிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்பவே பிம்பத்தைக் காட்டும். மேலும், கண்ணாடியால் எல்லாவற்றையும் பிரதிபலிக்க முடியாது. சான்றாக, ஓர் இடத்தில் நிலவும் தட்பவெட்ப நிலையைக் கண்ணாடியால் துல்லியமாகக் காட்ட முடியாது.  அது போலத்தான் இலக்கியமும். அதாவது எந்த நோக்குநிலையில் இருந்து செய்யப்படுகிறதோ அந்தச் சார்பியல்பைக் பெற்றுத்தான் இலக்கியம் உரு கொள்கிறது. தாம் தோன்றிய கால கட்டத்தின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் இலக்கியங்கள் வெளிப்படையாக எடுத்துரைத்து விடுவதில்லை. சில செய்திகளை இலக்கியங்கள் பூடகமாகப் பேசுகின்றன; சிலவற்றைப் பற்றிப் பேசாமல் மௌனம் காக்கின்றன; சிலவற்றைத் திரித்து வேறுபடுத்திக் கூறுகின்றன. ஆக, ஓர் இலக்கியத்தின் நுவல்பொருளை அது தோன்றிய காலச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தேவை அறியலாகிறது.அதனடிப்படையில் இங்கு ஏரெழுபது என்னும் நூல் ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது.

KEYWORDS

இலக்கியம், பிரதிபலிக்கும், கண்ணாடி, ஏரெழுபது, பூடகமாக
  • Volume: 1
  • Issue: 3

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline