தமிழ் இலக்கணத்தைத் தேர்வுக்குப் படிப்பதோடு முடிந்து விட்டது என்று நாம் அனைவரும் நினைக்கிறோம். சில சமயங்களில் இலக்கண ஆசிரியர் தேவையில்லாமல் நம்மீது இலக்கணத்தைத் திணிக்கிறாரோ என்ற எண்ணம் தோன்றும். நாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்கும்போது இலக்கணம் என்பது பாடப்புத்தகத்தோடு நின்று விடுவதில்லை, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேச்சிலும், எழுத்திலும் இரண்டறக் கலந்து நிற்கிறது என்பது தெளிவாக உணர முடிகிறது. தமிழ் இலக்கணத்தை மாணவர்களுக்கு மிக எளிய முறையில் கற்பிப்பதில் மிகச்சிறந்த முறைகளை ஆராயும் போது வரைபடங்களே அதிகம் வழிகோலுகிறது. தமிழ்மொழிக்கு மட்டுமே சிறப்பான இலக்கணக்கூறுகள் அமைந்துள்ளன. ஒன்றன்பின் ஒன்றாகப் பல சொற்களை ஒலிக்கும் போது விரைவு, உணர்ச்சி, முயற்சிச் சிக்கணம், எளிமை முதலிய காரணங்களால் சொல்லொலிகள் மாறுபடுகின்றன. இதனை ஒன்றன்பின் ஒன்றாக விளக்க மிகவும் இன்றியமையாதது இலக்கணத்தை வரைபடம் மூலம் கற்றலே ஆகும்.