உலக அறிவு என்பது காலங்காலமாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளால் கட்டமைக்கப்பட்டதாகக் காணப்படுகின்றது. புதிய அறிவை உருவாக்கல், அதனை மீள் உருவாக்கம் செய்தல் என அறிவுத் தொகுதி வளர்ச்சியடைந்து கொண்டே செல்கின்றது. இந்நிலையில் உலக அறிவைக் கட்டமைப்பதில் தனியொருவர் பொறுப்பாக்கப்படவில்லை. அறிவுத் தொகுதியானது உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஆய்வாளர்களின் ஒட்டுமொத்த முயற்சியால் கட்டமைக்கப்பட்டதாகும். ஆய்வாளன் தவறு இழைக்கும்போது அது அறிவுத் தொகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இக்கட்டுரையானது அறிவைக் கட்டமைப்பதிலும் அதனை மீள் உருவாக்கம் செய்வதிலும் ஆய்வாளனின் வகிபங்கு தொடர்பாக ஆராய்கின்றது. இவ்வாய்வுக்குரிய தரவுகள் இரண்டாம்நிலைத் தரவுகளாக காணப்படுவதோடு பகுப்பாய்வு முறையியலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.