ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றிய இலக்கியங்கள் யாவும் அவ்வக்காலப் பழக்கவழக்கங்களைப் பிரதிபலிப்பவையாக உள்ளன. சங்க காலத்தில் மென்மையாக உரைக்கப்பெற்ற அறங்கள் யாவும் சங்கம் மருவிய காலத்தில் தோற்றம் பெற்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வலிந்து உரைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு வலிந்துரைப்பதற்கான காரணத்தினையும் அவ்விலக்கியங்கள் தோன்றுவதற்கான தேவைகளையும் ஆராயும் முகமாக இக்கட்டுரை அமைகின்றது.