அடையாளம் : சிதம்பர அடிகள் நூலகம்

Aṭaiyāḷam: Citampara aṭikaḷ nūlakam

[ Published On: August 10, 2016 ]

கொங்கு மணம் கமழும் கோவையில், இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைச்சாலையில், நொய்யல் ஆற்றின் தென்கரையில் எம்பெருமான் பட்டீசுவரர் – பச்சைநாயகி குடிகொண்டு அருள் வழங்கும் அற்புதத் தலமாக விளங்குவது பேரூர். ‘பிறவா நெறி’ என்றும் ‘மேலைச் சிதம்பரம்’ என்றும் போற்றப்படும் இவ்வூரில் சிவநெறியும், பக்திநெறியும் நிறைந்து விளங்குகிறது. இத்தகைய சிறப்புப்பெற்ற பேரூர் கோவையிலிருந்து சிறுவாணி, பூண்டி செல்லும் சாலையில் சுமார் 20கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இவ்வூரில் செந்தமிழ்க் கல்லூரியாகத் தொடங்கப்பெற்று கலை அறிவியல் கல்லூரியாக வளர்ந்துள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் நூலகமாகச் செயல்பட்டுவரும் ‘சிதம்பர அடிகள்’ நூலகத்தின் உயர்தனிச் சிறப்பினை அடையாளப்படுத்துவதாய் இக்கட்டுரை அமைகிறது.

KEYWORDS

கொங்கு, கோவை, மேற்குத் தொடர்ச்சி மலை, நொய்யல், எம்பெருமான், பட்டீசுவரர்
  • Volume: 2
  • Issue: 6

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline